ஞாயிறு, 4 ஜூன், 2023

கவிஞர் சு. குணசேகரன், மலாக்கா


 

புத்தாண்டு வேள்வி
 
பா: நாலடிக் கொச்சகம்
புதிய ஆண்டே இனிதே வருக
     புதுத் தெம்பை யள்ளித் தருக
புதிய திட்டம் வெற்றிப் பெறுவே
     புதுத் திடமும் விரைந்து தருக!
 
சவால் கொண்ட ஆண்டு கடந்து
    சாதனை பெறும் ஆண்டு மலர்க
சீறும் நோய் சிதறிப் போக
   சீரும் சிறப்பும் செழித்து வருக!
 
மனித குலமும் உறுதி யுறுக
  மண்ணுலகும் மாண்பு பெறுக
புனித செயல் யாவும் பெருக
  புண்ணி யங்கள் நிலைத் துயர்க!
 
கல்வி சமூகம் பொருளும் உயர்க
   கன்னல் தமிழும் நிலைத்து நிற்க
களிப்பு நிறையும் ஆண்டு மலர
   கன்னி முயற்சி யாவும் செய்க!!!
 
******************************************************************************************

அன்பு வாழ்ந்திடுமே !
 
அன்பென்று சொல்வதால்
வன்புதான் பிறந்திடுமோ!
அன்புக்கும் உண்டோதான்
அடைக்குந்தாழ் அறிவோமே!
அன்றேநல் மொழிந்தாரே!
அறப்பாலில் வள்ளுவரும்!
நன்குசெய் நலிவிலாது
நல்லன்பும் வாழ்த்திடுமே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கவிஞர் சரவணன் இராமசந்திரன்

  நல்மழையே நில்!   வெள்ளத்தால் அடைந்ததுயர் விளக்கிடவும் கூடிடுமோ ? உள்ளத்தில் குடிகொண்ட உறுதியையும் போக்கிற்றே! கடும்வெள்ளம் கண்டவிடம் கண்ணு...