சந்தக் கவிஞர் சங்கு சண்முகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சந்தக் கவிஞர் சங்கு சண்முகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 4 ஜூன், 2023

சந்தக் கவிஞர் சங்கு சண்முகம்


 

எங்கள் நாடு 
 
இந்தநாடு எங்கள்நாடு
      இந்தநாட்டு மண்ணிலே 
இன்றிருக்கும் உயிர்கள்யாவும் 
       எங்கள்தாயின் பிள்ளையே
இந்தவானம் எங்கள்வானம்
      இந்தவானின் மீதிலே
இங்கும்அங்கும் ஓடும்மேகம் 
       எங்கள்தாயின் கூந்தலே!

பாடுதென்றல் எம்மினத்துப் 
      பண்பெடுத்துப் பாடிட
ஓடுமாறும் இங்கிருப்போர்
      ஒற்றுமையைக் கூறிட
காடுமேடு சீர்படுத்திக் 
      காதல்கொண்ட தந்தையர்
 நாடுமலை நாடிதென்று
       நாவினிக்கப் பாடுவோம்!

நான்பிறந்து நான்வளர்ந்து
      நான்மணந்த நாட்டிலே
வீண்குழப்பம் இல்லையில்லை
      வேற்றுமைகள் இல்லையே!
தேன்சுரக்கும் பூவடாநம்
      தேசமக்கள் நெஞ்சமே
வீண்பகைக்கு வித்திடோம்
       வீணர்களை விட்டிடோம்!

வந்துவந்து மக்கள்கூடி
     வானளாவச் சேரினும்
தந்துதந்து பாலமுதம்
     தாங்கிவந்த அன்னையைச்
சிந்துபாடிக் கைகள்கூப்பிச்
      சிரங்கவிழ்த்து வாழ்த்தியே
எந்தநாளும் என்றனாவி
      உன்றனுக்கே என்றிடு!  


கவிஞர் சரவணன் இராமசந்திரன்

  நல்மழையே நில்!   வெள்ளத்தால் அடைந்ததுயர் விளக்கிடவும் கூடிடுமோ ? உள்ளத்தில் குடிகொண்ட உறுதியையும் போக்கிற்றே! கடும்வெள்ளம் கண்டவிடம் கண்ணு...