பாவலர் DR. கோவதன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாவலர் DR. கோவதன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 4 ஜூன், 2023

பாவலர் DR. கோவதன், பட்டர்வெர்த்து


 

ஆண்டருள் முருகா
 
நாவடி  உரைக்கும் சொல்லினிலே
    நாயகன் உன்னுள் இணைந்தோமே
காவடி யாடும் ஆடலிலே
    காட்சிகள் கோடி கண்டோமே !
தூவலில் நின்னைப் புனைவதற்குத்
    தூயனே என்னை ஆண்டருள்வாய் !
ஆவலில் பாடும் பாட்டுக்குள்
    ஐங்கர னோடே இணைந்திருப்பாய் !

பாலதைச் சுமத்தல் எம்கடனே!
    பாவமே தீர்த்தல் உன்கடனே!
வேலதைச் சுமக்கும் வேலவனே!
    வெற்றியைத் தாதா சரவணனே !
நாளிதில் எங்கும் உன்நாமம் !
    நானிலம் போற்றிக் கொண்டாடும் !
ஊழியும் இல்லை உனைத்தொழுதால் !
    உயர்வதே நாடும் நின்னருளால் !

*****************************************************************************************

மாட்டுப் பொங்கல்

துஞ்சா துழைக்கும் காளைகளைத்
    தூய்மை யாகக் குளிப்பாட்டி
மஞ்சள் சிவப்பு வண்ணத்தில்
    மாலை யதற்கும் அணிவித்தே
கொஞ்சிக் குலவிக் கொம்புகளைக்
    கூராய்த் தீட்டி யரங்கினிலே
மஞ்சு விரட்டும் வீரரையும்
    மருளச் செய்வார் இந்நாளில் !

ஊரே திரண்டு பொங்கலிட்டே
     உவகை பொங்கக் காளைக்குப்
பாரே வியக்கப் படையலிட்டுப்
    பாடி யாடி மகிழ்ந்தபடிச்
சீராய் மாட்டுப் பொங்கலதைச்
   சேர்ந்தே சிறக்கக் கொண்டாடிப்
பார்க்கும் உலகம் தோழர்காள் !
    பசியும் அடங்கும் காண்பதனால் ! 

கவிஞர் சரவணன் இராமசந்திரன்

  நல்மழையே நில்!   வெள்ளத்தால் அடைந்ததுயர் விளக்கிடவும் கூடிடுமோ ? உள்ளத்தில் குடிகொண்ட உறுதியையும் போக்கிற்றே! கடும்வெள்ளம் கண்டவிடம் கண்ணு...