பெண்
மண்ணென்றும் விளைவிக்கும் மங்கையரும் விளைநிலமே!
பெண்ணென்றால் பிள்ளைகளைப் பெறுவதனால் பெறுமையுண்டு!
பெற்றெடுத்தப் பிள்ளைகளைப் பெரியவராய் ஆக்குதற்குள்!
உற்றதுன்பம் எதுவாயினும் உயிர்கொடுத்தம் காத்திடுவாள்
தன்னுடன் பின் செங்குருதி தக்கதொரு பாலாகும்!ள
என்னவிலை கொடுத்தாலும் ஈடாமோ தாய்ப்பாலும்!
அன்னையென அவதரித்தாள் ஆற்றெலெனும் பெண்தெய்வம்!
தன்னலந்தான் இல்லாதாள் சால்பு!
***************************************************************************************
உன்னைநான் பார்த்ததுமே உள்ளம் பறிகொடுத்தேன்!
என்னையுன் கண்கள் இதமாய் வரித்ததும் !
முன்னம் நமக்குள்ள முற்பிறவி பந்தம்தான்!
இந்நாள் இணைத்ததும் என்னுயிரில் ஒன்றியதும்!
சாதிகுலங் கோத்திரமுந் சார்ந்தசமயமும்!
மோதியெழுங் காதல்முன் மூச்சே விடுவதில்லை!
முப்போதும் நம்மனங்கள் முத்தக் கனவுகளில்!
தப்பேதும் செய்யாமல் தான்தவித்து வாடுவதை!
எப்படியோ என்தாயார் எல்லாமுந் தானறிந்து!
இப்போதே பெண்கேட்க உன்னில்லம் வந்தவரை!
"சாதியில் தாழ்ந்தவளே சம்பந்தி ஆவதா?
வீதியில் ஓடடி; விரட்டினார் நின்தந்தை!
காதலர் கண்கள்தாம் காண்பதெல்லாம் அன்பொன்றே!
சாதலே தான்வரினும் சத்தியமாய் ஏற்போம்'வா,
வாழ்த்துவரும் பின்னாளில் வாழ்ந்துநாம் காண்பிப்போம்!
வாழ்வில் வசந்தம் வரும்!