தைப்பூசம்
தைத்திங்கள் பிறந்ததுவே தரணியில் வளமாக
தைப்பொங்கல் பொங்கியதே தமிழர்கள் இல்லமதில்
தைப்பூசம் மலர்ந்ததுவே தரணிவாழ் முருகனுக்கு
தைதைகா வடியாடாது தளர்ந்தனரே பக்தர்கள்!
கைக்கூப்பி வணங்குதற்கு காத்திருக்கும் பக்தர்கள்
வைக்கும்கா ணிக்கைகள் வடிவேலைச் சேரவில்லை
கைக்குழந்தை தொட்டிலிலே கரும்புகளும் காணிக்கை
வைக்கும்நாள்
கூடவில்லை வந்துவிட்ட நச்சுயிரால்!
****************************************************************************************
அன்பெனும் நதியினிலே ஆர்வமுடன் விளையாடி
அன்புடனே நேசத்தால் அகிலங்கள் கொண்டாடும்!
அன்பையள்ளும் திருநாளை அனைத்தின்று மக்களுமே
அன்புநெறி போற்றிடவே அகமகிழ்ந்து களித்திடுவர்!
மலர்களினால் பரிமாற்றம் மனத்தையும் மயக்கிடுமே
உலர்ந்திட்ட உள்ளமதில் உற்சாகப் பண்பாடும்!
நிலமங்கை பூரிப்பாள் நின்மலனை வழிபட்டே
வலக்கரமும் பற்றிதினம் வாழ்வுநலம் பேணிடுவாள்!
காதலர்கள் தினமென்று காலமெலாம் செப்புகின்றர்
வாதிட்டு சென்றிடினும் வழக்கமதை மாற்றவில்லை!
சாதகமாய் பயன்பாட்டில் சாதனையாய் ஆண்டுதொறும்
காதலர்நாள் சிறந்திடுதே
கண்டுமனம் சொக்கிடுதே!