செந்தமிழ் கவிமணி வே. மகேந்திரன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செந்தமிழ் கவிமணி வே. மகேந்திரன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 4 ஜூன், 2023

செந்தமிழ் கவிமணி வே. மகேந்திரன், ஈப்போ


 

தமிழ் சோறுபோடுமா ?

சோறுபோடுமா தமிழ் படிக்கிறோம்
      என்று சொல்பவன் தமிழனா!
சோறு வேடித்தாய் மொழியிழப்பவன்
      சுயமானம் உள்ளநல் தமிழனா!
மானரோசமும் சூடுசொரணையும்
      மருங்கிப் போனவன் தமிழனா!
வானளாவிய தமிழின்பெருமையை
      அறிந்திடாதவன் தமிழனா!
தாயை மறந்தொரு மகனிருப்பானோ!
      தாய்த்தமிழ் தன்னைத் துறந்திருப்பானோ!
தாய்மொழி தவிர்த்தே பன்மொழி கற்றாய்
      தமிழன் என்ற பெருமையை விட்டாய்!
தாய்மார்களே!
தாய்ப்பால் ஊட்ட மறந்ததாய் மார்களே!
      தமிழ்ப்பாலாவது ஊட்டக் கூடாதா!
பிள்ளைக்குத்தமிழை ஊட்டமறந்தீர் - பேரப்
     பிள்ளைகளுக் காவது தமிழை ஊட்டுங்கள்
தமிழவாழ்ந்தால் தமிழினமநிலைக்கும்

*********************************************************************************************

சான்று

உயிரோடு செத்துநட மாடுகின்ற உலகீர்!
      உண்மைக்கும் சான்றுகளைத் தேடுகின்ற அறிஞீர்!
பயிராகு முன்விதைகள் வந்தவிதம் என்ன
      பலகால மாயெழுந்த வினாவினவிடை என்ன
உயிரோடும் உடலுமக்கு வந்தவிதம் என்ன
      உமதன்னை தந்தையென்று உறுதியெங்கு பெற்றீர்
தயிராக்கிய பாலதனை மோராக்கு வெண்ணெய்
      தானெடுக்கும் தத்துவத்தை யாரிட்த்தில் கற்றீர்
 
உள்ளுணர்வின் விரிவின்றி உண்மை தன்னை
      உண்மையாய் அறிகின்ற உள்ள மின்றி
எள்ளுக்குள் இருக்கின்ற நெய்யைக் கூட
      இயற்கையென்று திரைபோட்டு முடிவிட்டு
வெள்ளறிவைப் பெருமிதமாய்ப் பேசிக் கொண்டு
      விடிவிளக்கை அனைத்து விட்டு இருளில் தூங்கும்
கள்ளமில்லா அறிஞர்களே! மனத்தின் சாட்சி
      கற்பனையா? ஆதாரம் கேட்கின் றீரா!
 
பெற்றவர்கள் இவரென்ற சொல்லைக் கேட்டுப்
      பெருமிதமாய்ச் சான்றின்றி ஏற்றுக்கொண்டீர்
கற்றவர்கள் எழுத்தெல்லாம் அறிவாம் என்றே,
      கண்மூடித் தனமாக ஏற்றுக் கொண்டீர்
உற்றதொரு நடைமுறை வாழ்க்கைக் கேற்ற
      எல்லாமே உண்மையெனப் போற்றிக் கொண்டீர்
முற்றுணரும் முனைப்பின்றி இயற்கை யென்றே
       முனைமழுங்கிக் கொள்கையுடன் முற்றுப் பெற்றீர்!

கவிஞர் சரவணன் இராமசந்திரன்

  நல்மழையே நில்!   வெள்ளத்தால் அடைந்ததுயர் விளக்கிடவும் கூடிடுமோ ? உள்ளத்தில் குடிகொண்ட உறுதியையும் போக்கிற்றே! கடும்வெள்ளம் கண்டவிடம் கண்ணு...