பகைவனையும் வாழ்த்துவோம்
பகைமை கொண்டு பைந்தமிழில்
பாடல் இயற்ற வேண்டாமே!
தகைசால் புலவர் எமக்கின்று
தக்க முறையில் இயம்பினரே!
மிகையாய் வெகுளி பொங்கிடுங்கால்
வெல்லும் சொல்லைப் பயன்கொண்டு
நகைத்தே அவரை வாழ்த்திடலாம்!
நலமே விளைய வேண்டிடலாம்!
பாரில் பகைவன் இருந்தால்தான்
படைக்கு முன்னே நீநின்று
தேரை ஓட்டும் திறன்பெறுவாய்!
தெரிந்தே உணர்ந்தால் பலம்பெறுவாய்!
ஏறும் ஒவ்வோர் அடியும்நீ
எதிரி வணங்கித் தொழுதிடடா!
ஊரில் இதனை அறியாதோர்
உறக்க மின்றி அலைவாரே!