கவிஞர் கிரு. முகிலரசன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிஞர் கிரு. முகிலரசன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 4 ஜூன், 2023

கவிஞர் கிரு. முகிலரசன், பங்கோர்


 


பெருமை காப்போம்
 
பல்லினம் கூடி வாழ்ந்து
    பன்னெறி மொழிகள் பேணி
நல்வளம் நிறையப் பெற்ற
    நாநிலம் புகழும் நாடு;
கல்வியும் கலையும் ஈங்கு
    கலந்திடும் திறத்தைக் கண்டு
பல்லியம் மகிழ்ந்துப் பாடி
    பாணரும் போற்றும் வீடு!
 
செம்பனை கரும்புச் செந்நெல்
    தேயிலை அனாசித் தென்னை,
நம்பிடும் ரப்பர் ஈயம்
    நாம்வளர் கனிம ரங்கள்
நம்முடன் வளரும் பண்பும்
    நாலினக் கலையின் கூட்டும்
நிம்மதி அளிக்கும் ஆட்சி
    நிலமிதில் கிடைத்த மாட்சி
 
பொன்னிற மாலை வானம்
    பொன்னொளி கடலில் வீசும்
பண்ணிசைப் பறவைக் கட்டம்
    பல்லிசை செவியில் ஊட்டும்
விண்ணசைக் காற்றும் வந்து
    மென்னுடல் தழுவிப் போகும்
கண்ணெதிர் காட்சி எல்லாம்
    கருத்தினைக் கவர்ந்தே ஈர்க்கும்
 
செழுமையே பொங்கும் நாடு
    செங்கதிர் உதிக்கும் நாடு
முழுமதி ஒளியைத் தூவும்
    மோதமாய்க் கடலும் பாடும்
நழுவிடும் நதியும் மேகம்
    தழுவிடும் மலையும் கூடும்
விழுமிய இயற்கைச் செல்வம்
    வீற்றிடும் இனிய காடும்
 
இயற்கையின் எழில்கள் ஈங்கு
    யாங்கனும் செழிக்கக் காண்போம்
செயற்கையின் வடிவம் யாவும்
    சீர்வளம் கொழிக்கக் காண்போம்
அயலவர் வியக்கும் வண்ணம்
    அயர்விலா உழைப்பைப் பேணி
தயக்கமே இல்லா தெங்கள்
    தாயகப் பெருமை காண்போம்!
 
பல்லினம் கூடி வாழ்ந்து
    பன்னெறி மொழிகள் பேணி
நல்வளம் நிறையப் பெற்ற
    நாநிலம் புகழும் நாடு;
கல்வியும் கலையும் ஈங்கு
    கலந்திடும் திறத்தைக் கண்டு
பல்லியம் மகிழ்ந்துப் பாடி
    பாணரும் போற்றும் வீடு!
 
செம்பனை கரும்புச் செந்நெல்
    தேயிலை அனாசித் தென்னை,
நம்பிடும் ரப்பர் ஈயம்
    நாம்வளர் கனிம ரங்கள்
நம்முடன் வளரும் பண்பும்
    நாலினக் கலையின் கூட்டும்
நிம்மதி அளிக்கும் ஆட்சி
    நிலமிதில் கிடைத்த மாட்சி
 
பொன்னிற மாலை வானம்
    பொன்னொளி கடலில் வீசும்
பண்ணிசைப் பறவைக் கட்டம்
    பல்லிசை செவியில் ஊட்டும்
விண்ணசைக் காற்றும் வந்து
    மென்னுடல் தழுவிப் போகும்
கண்ணெதிர் காட்சி எல்லாம்
    கருத்தினைக் கவர்ந்தே ஈர்க்கும்
 
செழுமையே பொங்கும் நாடு
    செங்கதிர் உதிக்கும் நாடு
முழுமதி ஒளியைத் தூவும்
    மோதமாய்க் கடலும் பாடும்
நழுவிடும் நதியும் மேகம்
    தழுவிடும் மலையும் கூடும்
விழுமிய இயற்கைச் செல்வம்
    வீற்றிடும் இனிய காடும்
 
இயற்கையின் எழில்கள் ஈங்கு
    யாங்கனும் செழிக்கக் காண்போம்
செயற்கையின் வடிவம் யாவும்
    சீர்வளம் கொழிக்கக் காண்போம்
அயலவர் வியக்கும் வண்ணம்
    அயர்விலா உழைப்பைப் பேணி
தயக்கமே இல்லா தெங்கள்
    தாயகப் பெருமை காண்போம்!

**********************************************************************************************

பிரிவாற்றான்
கால்வலம் வைத்தவன் சுடர்தரும் ஒளியென
கைப்பிடித் தேகிடும் வேளை - செங்
கோல்அவன் கையினில் அளவே மனையறம்
கொடுத்திடு வான் இளங்காளை
கால்சிலம் பத்தினன் கண்வழி
போதையைக்
காதலாய் ஊட்டிடும் வேளளை- தன்
பால்அவன் கொண்டிடும் காதலை
உணர்த்தியே
பற்றிடு வான் இளங்காளை
நால்வகைக் குணங்களும் நங்கையைக்
கவ்விய
நாணிடச் செய்திடும் வேளை – தேன்
பால்உடன் கலந்ததில் பழம்விழுந்
ததுவென
பற்றிடு வான் இளங்காளை
தாள்வனம் வந்திட ஈன்றொரு
பிள்ளையைத்
தந்தவன் மகிழ்ந்திடும் வேளைமாந்
தோல்சிறப் பிள்ளையின் தந்தையாய்
ஆனதில்
வாழ்த்திடு வான் இளங்காளை
சால்பொடு இல்லறம் நல்லற மாய் அவள்
திறம்பட நடத்திடும் வேளை-அவள்
போல்ஒரு மங்காயைப் பெற்றது
பேறெனப்
போற்றிடு வான் இளங்காளை
எல்எழும் போதவள் தணிப்பது கடனென
எதிர்வந்  தணைத்திடும் வேளை-படர்
ஆல்மரத் தண்ணிழல் அவளென
எண்ணியே
பிரிவீதீ யான் இளங்காலை

கவிஞர் சரவணன் இராமசந்திரன்

  நல்மழையே நில்!   வெள்ளத்தால் அடைந்ததுயர் விளக்கிடவும் கூடிடுமோ ? உள்ளத்தில் குடிகொண்ட உறுதியையும் போக்கிற்றே! கடும்வெள்ளம் கண்டவிடம் கண்ணு...