சென்றுவா இருபதே
வானத் திருக்கோலம் வண்ண முகம்பூணக்
காணக் களியாண்டே
காலெடுத்து வைத்தனை
ஏராளப் பாடங்கள்
எங்களுக்குக் கற்பித்தாய்
பாராட்ட வந்துள்ளேன்
பாவலன் நானே
தொடக்கத்தில் மையற்
தொடுவிர லாலே
மடப்பத்தைக் காட்டி
மறுமுகம் மாற்றி
உலகை உலுக்கும் ஒருநோதைத்
தந்து
கலக்கமும் செய்தனை காரணத்
தோடே
தொழில்வளம் மங்க
துயரங்கள் ஓங்க
அழியவகை செய்தாய்
அதிலென்ன ஆனந்தம்??
ஊரடங் குத்தரவில் ஊரே
மழுங்கயிப்
பாரடங்கச் செய்தும்
பரிவுனக் கெங்கள்மேல்
சிக்கனம் செய்து செலவழிப்
பாயெனப்
பக்குவத் தோடு பகர்ந்தனை
ஆகாகா
உண்டுயிர் வாழ உளமானம்
விட்டெவரை
அண்டி உயிர்வாழும் கேட்டை
அருளாது
தன்மானம் காக்கும்
தரமிக்க மாண்பினைச்
சன்மானம் என்பேன் தகைமிகு
ஆண்டே
அயரா துழைத்தோம் அறிவின்
பசிக்குப்
பயிலாது விட்ட படுசிறப்பு
நூல்களை
வாசித்து ஞானம்
வளர்த்ததும் மீமிக
நேசித்த இல்லோள் நிழலொடு
வாழ்ந்து
குழந்தை குடியெனக்
கூடிடச் செய்த
பழுதிலா ஆண்டேவுன் பக்கம்
முடிவுறும்
இந்நொடி கண்களில் ஈரம்
மறையாமல்
கண்ணீர் ஒழுகும் கதையறி
மற்றவர்க்கு
எப்படி போனது இருபது
இருபதென்றால்
தப்பெனச் சொல்லுவர்
தங்கமணி எற்கு
மிகவும் சிறப்புடன்
விண்புகழ் நாட்டித்
திகழ்ந்தநல் ஆண்டெனச்
செப்புவன் கேளாய்
விடைபெறும் இச்சில
வேளையில் நன்றி
படைக்கிறேன் நல்யாண்டு
இருபது இருபதே
சென்றுவா மேன்மை சிறந்து!
நான் ஒரு சாம்பிராணி
ஏன்பிறந்தோம் என்றெண்ணி
சிந்திக்க
மாந்தர்தம் இனத்தைக் கேட்டேன்
நான்பிறந்த காரணமோ
வினையென்றர்
விதியென்றர் ஞாலம் மேலே
தான்பிறந்த நோக்கத்தை
அறிகிலரே
பிறந்தழியும் சாபம் வாங்கி
யான்பிறந்த நோக்கத்தை
எண்ணவே
மெச்சினனே என்னே நானே
குறைநின்ற நெஞ்சினால்
மாந்தரோ
தாங்காமல் கூடி; செம்மை
இறைநின்ற கோயிற்குச்
சென்றவரின்
விண்ணப்பம் இடுகின் றாரே
பெறுகின்ற சீரெல்லாம் பெற்றபின்னர்
மறப்பாரே பெருமான் தன்னை
நிறைநின்ற தன்மையால்
இறைமுன்பு
நான்கிடந்து நிலைக்கின் றேனே
பணம்கண்டால் சுற்றத்தைத்
தாங்குவார்
அதுகுறைந்தால் பழிப்பர்; செல்வ
கணம்கொண்ட வேறொருவன்
அடிசுற்றித்
தன்வாழ்வுக் காலம் போக்கிப்
பிணம்கொண்ட கோலவரை
தன்முகம்
மாற்றுவரே பலநூ றாக
மணம்கொண்ட நானோயென்
குணத்திலே
சிறிதேனும் மாறா தானே
சிரிப்பாரைக் காரியங்கள்
ஈடேற
உடன்சேர்த்துச் சிரித்துக் கொண்டு
நெரிப்பாரே அவர்கழுத்தைக்
காரியமோ
முடிந்தவுடன் நிறைவு கொள்வர்
பிரிப்பாரே பிறர்குடியைக்
கெடுப்பாரே
இரக்கமனம் பெரிதும் இன்றி
எரிப்பாரைக் கடியாது
நானவருக்(கு)
இறைஞ்சுகிறேன் இறைவன் முன்பே
நட்டாலும் கனிதரூஉம்
மரத்தினை
உய்யாது நறுக்கித் தள்ளும்
முட்டாளாம் ஆறரிவு
கொண்டவராம்
மாந்தர்போல் முறைகொள் ளாமல்
சுட்டாலும்
மணம்கொடுப்பேன் அஞ்சாமல்
எரிப்பாரின் சொல்லை என்றும்
தட்டாமல் அழிந்தழிந்து
பிறப்பெடுக்கும்
என்பெயரே சாம்பி ராணி
