கன்னிப் பெண்ணின் காதல் வார்த்தை
காதில் இனிக்கிறதே! - அதை
எண்ணி யெண்ணி எந்தன்
நெஞ்சம்
ஏங்கித் தவிக்கிறதே!
மோகப் புன்னகை மூழ்க்கும் அவளின்
முகமும் வதைக்கிறதே! - வெறும்
கானல் நீரைக் கண்ட மான் போல்
கவனம் சிதைகிறதே!
கண்கள் வீசும் காந்தப் பார்வை
கவர்ந்தே இழுக்கிறதே! - அவள்
பொன்னார் மேனி பொழியும் ஒளியில்
புவியும் சுழல்கிறதே!
இதய வீட்டில் ஏற்றியச் சுடராய்
இருந்தே ஒளிர்கிறதே! - அவள்
உதட்டில் சிதறும் உணர்ச்சி அசைவால்
உடலும் சிலிர்க்கிறதே!
நாணம் கொண்டு நழுவும் அவளை
நாடச் சொல்கிறதே! - மனம்
காண வேண்டி காத்து நிற்க
காலம் செல்கிறதே!
கனவே காதல் கதையாய் போமோ?
கவலை சூழ்கிறதே!
எனது துணையாய் என்று வருவாள்?
ஏங்கித் தவிக்கிறதே!
மோகப் புன்னகை மூழ்க்கும் அவளின்
முகமும் வதைக்கிறதே! - வெறும்
கானல் நீரைக் கண்ட மான் போல்
கவனம் சிதைகிறதே!
கண்கள் வீசும் காந்தப் பார்வை
கவர்ந்தே இழுக்கிறதே! - அவள்
பொன்னார் மேனி பொழியும் ஒளியில்
புவியும் சுழல்கிறதே!
இதய வீட்டில் ஏற்றியச் சுடராய்
இருந்தே ஒளிர்கிறதே! - அவள்
உதட்டில் சிதறும் உணர்ச்சி அசைவால்
உடலும் சிலிர்க்கிறதே!
நாணம் கொண்டு நழுவும் அவளை
நாடச் சொல்கிறதே! - மனம்
காண வேண்டி காத்து நிற்க
காலம் செல்கிறதே!
கனவே காதல் கதையாய் போமோ?
கவலை சூழ்கிறதே!
எனது துணையாய் என்று வருவாள்?
ஏக்கம்
மூள்கிறதே!
***********************************************************************************************
அன்பான துணையிருந்தும்
அழகான மகவிருந்தும்
அழிவுக்குச் செல்லும் மனமே!
பின்னாளின் உனதருகே
பிரியாமல் இருக்கின்ற
பெண்ணெவளோ? சொல்லு மனமே!
இன்பத்தை அடைவதிலே
இருக்கின்ற செல்வமெலாம்
இழக்கின்ற மூட மனமே!
துன்பத்தை எதிர்கொண்டு
துயரத்தில் வீழ்கையிலே
துணையாரோ? தேடு மனமே!
பயனற்ற செயல்களிலே
பாவத்தை அடைவதனால்
பலனென்ன? கூறு மனமே!
வயதான காலத்தில்
வந்தடையும் நோய்களினால்
வருந்துவதார்? தேரு மனமே!
மனையாள வந்தவளின்
மனம்நோகச் செய்வதிலே
மகிழ்வுண்டோ? எண்ணு மனமே!
வினையாலே உனக்கிங்கு
விளைகின்ற பாவங்கள்
விலகிடுமோ?
சொல்லு மனமே!