ஆடம்பரம்
உலகை ஆடம்பரம்
உலுக்கி யாட்டிடுது
பிழைக்கும் வாழ்வினிலே
பிழைகளைச் சேர்த்திடுது
பிறப்பிலும் ஆடம்பரம்
இறப்பிலும் ஆடம்பரம்
பெருநாள் விருந்தினிலும்
பெருகிடும் ஆடம்பரம்
பண்பைப் பாழ்செய்யும்
பழக்கமாம் ஆடம்பரம்
துன்பம் வருதற்குத்
துணையாம் ஆடம்பரம்
சுற்றப் புறத்தாரைத்
துன்புறுத்தும் ஆடம்பரம்
கற்றவர் மனத்தையும்
கலக்குவது ஆடம்பரம்
எளிமை போற்றிட
கழன்றிடும் ஆடம்பரம்
தெளிந்தவர் தம்மை
திண்டா(து) ஆடம்பரம்
*******************************************************************************************
நொறுங்க உண்பது நன்மை - உணவை
விரைந்து விழுங்கல் தீமை
குறைத்து உண்பது நன்மை - வயிறு
நிறைய திணிப்பது தீமை
செரித்தபின் உண்பது நன்மை - நாச்
சுவைதேடி அலைவது தீமை
விருந்தே உண்பது ஆனாலும் - அதை
மருந்தேன உண்பதே மாண்பு