ஒளி பிறந்ததம்மா
ஒளி பிறந்ததம்மா உலகில் வழியுதயமம்மா
ஓர் குலவாழ்வில் அமைதி குடி கொண்டதம்மா
கேளி கூர்த்திடும் கனிவாய் நுனிசிறந்திட
கனி தரு மரமாய் குலுங்கி சிறப்போமம்மா
மனுக்குல மீட்புக்கு மாண்புயர் தேவனாய்
மண்ணிலே பிறந்தார் மங்கா மாட்சியுடனே
தனக்கென வாழாது பிறர்க்கென பணியாற்ற
தவப்புதல்வர் வாருமையா தாங்கொனா ஆட்சியுடனே
எளியோரின் இல்லமெல்லாம் எக்காளம் முழங்கிடவே
ஏசுபிரான் உம்மரசு எந்நேரம் பறைசாற்ற
களிப்பூட்டும் காரிருளில் கர்த்தரவர் அவதரிப்பு
கானக்தோர் உள்ளமெல்லாம் கவிபாடி புகழ்ந்திடவே
மரியாளின் இறையன்பு மானிலத்தில் மின்னிடவே
மனங்கவர் மணவாளன் மறைநூலை தந்துள்ளார்
திரியேக தேவனிவர் திகட்டாத இறையுமவர்
திருவிருந்தில் தருவாரே தித்திப்பாய் மறையுண்மை
திசம்பரிலே பூத்தவொரு தேமதுரத் தேவனிவர்
தீதில்லா மறையோனே தினமுந்தன் திருநாமம்
நேசத்தின் எல்லையிலே நேர்த்தமிகு மனதுடனே
நாயகா நம்பிக்கை நற்கருணை குணநாதா
அடியோரின் உள்ளத்திலே ஆழ்கடலின் முத்தெனவே
அசைந்தாடும் தென்றலென ஆடிவரும் அன்பிறைவா
தேடி வரும் பக்தரிடம் தேன்சுவையின் சுவையறிய
தேவாதிதேவா ராஜாதிராஜா
எங்களுடன் வாழும்
********************************************************************************************
ஒற்றுமையில் பற்றுவைக்கும் உணர்வு வேண்டும்
உடன் பிறப்பாய்ப் பிறவினத்தை மதிக்க வேண்டும்
கற்றவனாய்த் திகழ்வதற்குப் படிப்பு வேண்டும்
அறிந்திருக்கும் துடிப்பு வேண்டும்
வெற்றுரையைச் சொல்லாத விவேகம் வேண்டும்
வீண்வாதம் பாவமெனும் விவஸ்தை வேண்டும்
மற்றவரை இழிவாகக் கருதல் விட்டு
மனிதகுலம் சிறந்தோங்க உழைக்க வேண்டும்!
சொந்தமொழி தமிழமுதைப் கற்ப தற்குச்
சுயமாகத் தன்னுணர்வு எழும்ப வேண்டும்
பந்தமுள்ள தொடர்புமொழி ஆங்கி லத்தைப்
பகுத்துணர்ந்து கற்றிடவும் ஆற்றல் வேண்டும்
சிந்தைதனில் மலாய்மொழிக்குச் சீர்மை தந்து
சீனமொழி கற்றாலும் வெற்றி மேலும்
விந்தைமிகு மலேசியத்தின் வலிமை ஓங்க
வினயமுடன் பலமொழிகள் தெரிய வேண்டும்!
தமிழுக்கு மகுடத்தைப் சூ ட்டப் போகும்
தமிழ்க்கவிப் பெருவிழாச் சிறக்க வேண்டும்
அமிழ்தான மொழிக்கு அச்சாரம் பதிப்பதற்கு
ஆராய்ந்து முத்திரை பதித்தல் வேண்டும்
நிமிர்ந்து நிற்கும் நம்மினத்தின் புகழைச்சொல்ல
நாளைய தலைமுறைக் கிதுவழியைக் காட்டும்
தமிழனத்தின் வரலாற்றை தக்கதொரு தருணத்தில்
பாவலரின் மன்றங்கள் பலயிங்கு இருந்தாலும்
பாங்குடன் தமிழ்ச்சேவை செய்யுவதை மறுப்பதில்லை
நாவலர்கள் பலபேரை நயமுடனே உருவாக்க
நற்கவிப் பெருவிழா சிறக்க வேண்டும்
பாவலர்கள் ஏற்றவிழா பிரபலமாய் அடையட்டும்
பங்குபெறும் எல்லாரும் பொறுப்புதனை யுணரட்டும்
காவலர்கள் தமிழ்ச்சேவை காவியமாய்த் தொடரட்டும்
காலத்தால்
அழியாத கல்வெட்டில் பதியட்டும்