செந்துறைக் கவிஞர் இளமணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செந்துறைக் கவிஞர் இளமணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 4 ஜூன், 2023

செந்துறைக் கவிஞர் இளமணி


 

பதினெட்டென்றால் படிக்கும் வயதே!
 
பதினெட் டென்றால் படிக்கும் வயதே,
  பக்குவ மில்லா வயதினர் என்பர் !-இந்தப்,
பதின்ம வயதில் பாழும் அரசியல்,
  படிப்பைத் தடுக்கும் அரசியல் விழுது!
 
இருபத் தொன்றே இதற்கும் பொருந்தும்,
  இயல்பாய் மூளையில் அரசியல் பதியும்!-மேலும்
ஒருபத் தானால் உண்மை புரியும்
  உருப்பட அரசியல் உதவியும் புரியும்!
 
படிப்பே வேண்டாம். அரசியல் போதும்
  பட்டம் எதற்கு விருதுகள் உண்டே!- இதற்குத்,
துடிப்பார் என்றால் துடுப்பை இழந்த,
  துறைகள் தானே அதிகம் பெருகும்!
 
ஆசிரி யர்கள் அரசியல் நுழைய
  அதற்குத் தடைகள் இன்னும் இல்லை- இதற்கு
ஆசிகள் வழங்குதல் அக்கப் போரே,
  அப்படி நடந்தால் அநியா யந்தான்!
 
இருபத் தொன்றே எதற்கும் பொருந்தும்,
  இந்த வயதே சிந்தனை வயது !- புத்திக்
குறுகிடக் காட்டும் பதினெட் டெல்லாம்,
  குற்றப் பட்டியல் உயர்ந்திடக் காட்டும்!
 
படிப்பில் நாட்டம் குறைந்திட நேரும்
  பக்குவ மில்லா அரசியல் நாறும்!-வெறும்,
துடிப்பில் சேரும் அரசியல் எல்லாம்,
    துன்பச் சரக்கின் தூண்களாய் மாறும்!

*****************************************************************************************

அசலும் நகலும்
 
எவன்தான் தலைவன் எவன்தான் தொண்டன்,  
   எதும் புரியாது- தலைவன்
இவன்தான் என்றால் எடுத்துக் சொல்ல
   எவனும் கிடையாது!
 
மக்களுக் காக மதிக்கும் செயலில்,
   மகிழ்ச்சியும் இருக்காது! - எம்,
மக்களின் துன்பம் இடுக்கண் களையும்
   மாண்பெதும் தெரியாது!
 
இங்கே பிறந்தோம் இங்கே வளர்ந்தோம்
  இதுதான் எமதில்லம்! –தமிழன்,
எங்கோ பிறந்தான் இவள்யார் என்பான்,
  எதிர்ப்பே திமிருள்ளம்!
 
காடுகள் மேட்டை அழித்து வளமாய்,
  காத்தவன் பெருமையினை- மலைய,
நாடிது போற்ற மறந்திடல் என்பது,
  நன்றிக் கதுமிரட்டல்!
 
அழகிய வீட்டைக் அமைத்துக் கொடுத்தோம்,
  அந்நியம் ஆனதுவாம்!- இங்கே
பழகிடும் அந்நியம் பாய்ந்தே குதற,
  பசுத்தோல் காண்பதுவா!
 
உழைத்தவன் இங்கே ஓடாய்த் தேய்ந்தான்,
  ஒன்றுமே நிலையில்லை!- தொண்டன்
பிழைக்க வந்தவன் என்கின் றானே,
  பிழையென் றறியாமல் !
 
தலைவன் மட்டும் சொகுசாய் வாழும்,
      தர்மமும் நிலைக்கிறது- சினத்தால்,
அலையும் கூட்டம் நிறவெறி ஆட்டம்
    அசலாய்த் தெரிகிறது!


கவிஞர் சரவணன் இராமசந்திரன்

  நல்மழையே நில்!   வெள்ளத்தால் அடைந்ததுயர் விளக்கிடவும் கூடிடுமோ ? உள்ளத்தில் குடிகொண்ட உறுதியையும் போக்கிற்றே! கடும்வெள்ளம் கண்டவிடம் கண்ணு...