செந்துறைக்கவிஞர் பெ. க. நாராயணன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செந்துறைக்கவிஞர் பெ. க. நாராயணன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 4 ஜூன், 2023

செந்துறைக்கவிஞர் பெ. க. நாராயணன்


 

ஞானப்பிள்ளை
 
கலைகளெல்லாம் இவரானார் கவிதைப் பண்ணின்
     தளைஅசைசீ  ரடிகளிலே தவழும் தென்னார் !
விளைபயிராய் அறிவூற்றை மாண வர்க்கு
     விதைத்தறிவை ஊட்டிவழி விளக்கும் நல்லார் !
மலையளவு ஞானத்தால் மலர்ந்த  வாணர் !
     மறைபொருளை சுவைபடவே வார்த்த தேனார் !
இலைஇவர்போல் ! இராமதாசர் இறையின் வம்சம் !
     இவர்சொல்லக் கற்றவர்கள் என்றும் உச்சம் !
 
பச்சிலையும் வேர்விதையும்  மருந்தாய் மாறும் !
     பலவண்ணப் பூக்களுமே பயனாய் ஆகும் !
அச்சங்கள் மூட்டும்நோய் அமைதி யாகும் !
     அத்தனையும் சுவாமியிடம்  அடங்கிப் போகும் !
உச்சத்தில் உள்ளகுரு  உதவிப் போனான் !
     உயர்ஞானம் தரும்மகளும்  ஒன்றிப் போனாள் !
மிச்சத்தைச் சொல்வதற்கோ ஏது மில்லை !
    மேன்மைமிகு இராமதாசர்  ஞானப் பிள்ளை !

*******************************************************************************************

கனலை மூட்டும் கொரோனா
 
துலங்கிய வாழ்வில் அன்று
    தொடர்ந்தன இன்பம் மானே!
வழங்குவ தெல்லாம் இன்று
    வதைத்திடும் துயரம் தானே !
விளங்கிடும் கொரோனா வாலே
    விடியலும் இரவாய்ப் போச்சு!
கலங்கியக் கண்ணீ ராகக்
    கதைகளின் முடிவும் ஆச்சு!
 
உருவமே இல்லா தொன்றால்
     உலகிலே கொள்ளைச் சாவு!
பெருகிய கிருமி யாகி
      பிழைகளை ஊட்டு திங்கே !
இருமலும் சளியும் நெஞ்சில்
      இறுக்கமும்  கூடி வாட்டும்!
கருகிய குடும்ப மாக்கிக்
    கனலதை யூட்டிக் கொல்லும் !
 
சினமதைக் குறைத்தி டாது
    சீறியே பாய்ச்சல் பாயும் !
மனமெனும் ஒன்றே இல்லா
    மதியிலாக் கொரோனா பேயே!
இனங்களைப்  பேத மின்றி
    இறந்திட வைக்கும் ஏமன் !
குணமுடன் இல்லத் துள்ளே
    குந்தியே இருத்தல் நன்றே !

கவிஞர் சரவணன் இராமசந்திரன்

  நல்மழையே நில்!   வெள்ளத்தால் அடைந்ததுயர் விளக்கிடவும் கூடிடுமோ ? உள்ளத்தில் குடிகொண்ட உறுதியையும் போக்கிற்றே! கடும்வெள்ளம் கண்டவிடம் கண்ணு...